மீனம் ராசி அன்பர்களே.! வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும்.
இன்று பொறுப்புகளை உணர்ந்து செயல்பட கூடிய நாளாக இருக்கின்றது. மனதிற்குள் எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடம் விலகியே இருக்க வேண்டும். உங்களை நீங்கள் சரியான முறையில் தயார் செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய திறமைகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல அன்பு உணர்வு கொண்டவர்களிடம் அன்பாக பழகுவார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் நல்ல முறையில் செயல்படுத்துவீர்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நம்பிக்கையுடன் உங்களால் செயல்பட முடியும். திட்டமிட்ட வளர்ச்சி இலக்குகள் செயல்படுத்த முடியும். அரசு துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கக்கூடும். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவாக முடிவு எடுக்க கூடிய சூழ்நிலை இருக்கும். குழப்பங்கள் எல்லாம் சரியாகும். வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும்.
நிதானமான போக்கு வெளிப்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற கூடிய சூழலும் இருக்கும். உங்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடிவிடும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். விருப்பங்கள் இருக்கும். எல்லா விதமான நன்மையும் ஏற்படும். நெருக்கடியான நேரத்தில் கூட நண்பர்கள் உங்களுக்கு உதவிகளை செய்து கொடுப்பார்கள். உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கக்கூடும். ஆனால் சில நபர்கள் வேண்டுமென்றே பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்யக் கூடும். அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். காதல் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தும். சிக்கலான காதல் இன்று சிறப்பை ஏற்படுத்தும். வானவர்களுக்கு தன்னிச்சையான முடிவுகளில் தெளிவு இருக்கும். அதிக ஆர்வம் இருக்கும். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை