மீனம் ராசி அன்பர்களே.! சாமர்த்தியமான பேச்சு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
இன்று கண்டிப்பாக எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதே போல் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். கண்ணாடி சார்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். அதே போல் கூர்மையான பொருட்களை கவனமாக கையாளவேண்டும். வழக்கமான பணிகளில் சில மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்கள் ஓரளவு உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி தரும். முன்னோர்கள் சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். அந்த சொத்துக்கள் பற்றிய நல்ல தகவல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். சமூகப்பணியில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களுடைய கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
எந்த ஒரு சூழ்நிலையையும் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். எல்லா விதமான காரியங்களும் நல்லபடியாக நடக்கும். மனதில் ஒருவித சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். பய உணர்வு இருக்கும். தயவுசெய்து எதையும் நினைத்து வருத்தப்பட வேண்டாம். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். சாமர்த்தியமான பேச்சு மூலம் எல்லா விஷயங்களும் சாதகமாக நடக்கும். காதல் மனதில் ஒரு சந்தோசம் ஏற்படும். மனம் தளராமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். மாணவர்கள் எதையும் சிறப்புடன் செய்ய முடியும். கல்வி மீது அக்கறை ஏற்படும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வரும்போது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்