மீனம் ராசி அன்பர்களே.! எதிர்பாராத பிரச்சினைகளால் மனம் குழப்பம் ஏற்படும்.
இன்று இஷ்டத்திற்கு மாறாக எண்ணிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். நீங்கள் நினைத்தது நடக்குமா என்றால் கொஞ்சம் கடினம் தான். இன்று நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். சந்திராஷ்டமம் இன்னும் முடியாததால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. யாருடைய விவகாரங்களிலும் தலையிட வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடக்க வேண்டும். இல்லத்தில் கோபம் கொள்ள வேண்டாம். குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதனை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆனால் தேவையில்லாத செலவுகள் அதிகமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிக பணிச்சுமை தடங்கள் ஆகியவை நேரிடும். மனதில் நிம்மதி குறையும். எதிர்பாராத பிரச்சினைகளால் மனம் குழப்பம் ஏற்படும். கடன் வாங்க வேண்டாம். தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்தில் சகோதர சகோதரிகளிடம் அன்பாக பேச வேண்டும். கோபங்கள் கொள்ள வேண்டாம். காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். அதனை அனுசரித்து தான் செல்ல வேண்டும். பக்குவமாக பேசினால் பிரச்சினை இல்லாமல் செல்லும். மாணவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சிந்தனையை அதிகப்படுத்தினால் கல்வியில் முன்னேற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு