மீனம் ராசி அன்பர்களே.! முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். எல்லாவிதமான நல்லதும் நடக்கும். தனவரவு ஏற்படுத்திக் கொடுக்கும். வருமானம் இரட்டிப்பாகும். தொழில் வளம் பெருகி முன்னேற்றம் ஏற்படும். புதிய கூட்டாளிகளை சேர்க்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். தொலைபேசி வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதிரிகளை எதிர்த்துப் பேசுவதை தவிர்க்க வேண்டும். நன்மை கண்டிப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் மூத்த சகோதரர்களிடம் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை பலப்படும். அப்பொழுதுதான் வாழ்க்கையில் சீக்கிரமாக வெற்றி பெறமுடியும். புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடன் பிரச்சனைகள் எல்லாம் கட்டுக்குள் இருக்கும். கடனில் ஒரு பகுதியை அடைய கூடிய சூழல் இருக்கும். திருமண தடைகள் விலகி செல்லும். காதல் பிரச்சினை கொடுத்தாலும் சரியாகிவிடும். கூர்மையான பொருட்களை கவனமாக கையாள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தடைகள் நீங்கி கல்வியில் முன்னேறி செல்ல முடியும். கல்வியில் முன்னேற்றகரமான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்