மீனம் ராசி அன்பர்களே.! துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
இன்று வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர்கள். கையில் காசு பணம் புரளும். கண்டிப்பாக நல்லது நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மீன ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டங்கள் எல்லாம் பனி போல் விலகிச்செல்லும். மனதில் ஒருவித தைரியம் இருக்கும். செய்யும் காரியங்கள் எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருக்கும். திறமை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கிவிடும். சுமூகமான உறவு நிலை ஏற்பட்டுவிடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகள் எடுக்க கூடிய சூழ்நிலை அமையக்கூடும். பயணங்களால் உங்களுக்கு வெற்றி இருக்கும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக அணுகி வெற்றி நடை போடுவீர்கள். மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் இருக்கும். கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். குழப்பங்கள் எல்லாம் சரியாகும். தெளிவாக முடிவெடுக்க முடியும். இல்லத்தில் உங்களுடைய சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். காதலில் உள்ளவர்களுக்கு மனதில் வருத்தங்கள் இருக்கும். சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும். பின்னர் சரியாகும். காதலில் புத்துணர்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டிலும் உங்களால் சாதனை படைக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை