Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! கவனம் தேவை….! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று உறவுகளால் கொஞ்சம் வெறுப்புகள் ஏற்படும். கோபம் அதிகமாக ஏற்படும். கோபத்தால் வீண் வம்பு வழக்குகளை விலைக்கு வாங்க வேண்டியிருக்கும். அவசரப்படாமல் நடந்து கொள்ளவேண்டும். மாமன் மைத்துனன் வகையில் உதவிகள் கிடைக்கும். உழைப்பு கடினமாக இருக்கும். கடின உழைப்பு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மற்றவர்களின் வேலைக்காக நீங்கள் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். மற்றவர்களை கேலி, கிண்டல் செய்ய வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். தொழில் சம்பந்தமாக புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது.

ஒப்பந்தங்களை சரியான முறையில் படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போட வேண்டும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எளிமையாக எடுத்துச் செல்ல முடியும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகள் எதுவும் பெரிதாக இல்லை. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். காதலில் உள்ள சிக்கல்களும் நீங்கிவிடும். இன்று மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். கல்விக்காக எடுக்கக்கூடிய முடிவுகளில் தெளிவு இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்தால் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:    7 மற்றும் 9                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்:  ஆரஞ்சு மற்றும் பச்சை

Categories

Tech |