மீனம் ராசி அன்பர்களே.! அலட்சியம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் கெடலாம். அன்னையின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. கொஞ்சம் விட்டுகொடுத்து செல்ல வேண்டும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். எந்த ஒரு தடையும் விலகிச்செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகளில் தெளிவு இருக்கும். பணியின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அலட்சியம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும். வாக்குவாதங்கள் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற வீண் விவகாரங்களில் தலையிட்டால் பிரச்சனைகள் வரும் பொறுமையாக இருந்தால் எதையும் சாதித்துக் கொள்ளலாம்.
கோபமான மனநிலையில் இருக்கும். அதனை தவிர்க்க வேண்டும். கடன் பிரச்சினைகளில் தலையிடும் போது கவனம் வேண்டும். பேச்சை மட்டுப்படுத்தி பேச வேண்டும். மாணவர்களுக்கு முடிவுகளில் தெளிவு வேண்டும். குழப்பங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். காதலில் கொஞ்சம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குழப்பத்தை ஏற்படுத்தும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு கற்றுக் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு