மீனம் ராசி அன்பர்களே! எச்சரிக்கை தேவை.
இன்று மனதிற்குள் இனம் புரியாத வருத்தம் ஏற்படலாம். நண்பரிடம் கவனமாகப் பழகவேண்டும். சில நேரங்களில் உங்களுடைய வார்த்தைகளில் தெளிவு இல்லாமல் போகும். மனதிற்குள் குழப்பம் இருக்கும். சட்டென்று முடிவுகள் எடுக்க வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்களுக்கு பண உதவி எதுவும் செய்ய வேண்டாம். தியானம் போன்றவற்றில் பயிற்சி எடுப்பது நல்லது. புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவு பெருகுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். வியாபாரம் வேகமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் இருக்கும். காரியங்களில் தடை தாமதம் இருக்கும். மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேல்அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டு நடக்கவேண்டும். வாக்குவாதம் வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கும். அவசரப்பட்டு சில காரியங்களில் ஈடுபட வேண்டாம். இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை இருக்கின்றது. கல்வியில் சிறப்பாக செயல்பட முடியாத சூழல் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை