Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! அனுசரணை வேண்டும்….! குழப்பங்கள் சரியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! சுயகௌரவம் பாதுகாக்கப்படும்.

இன்று உங்களுடைய செயல்பாடுகள் அனைத்துமே பரந்த மனப்பான்மையுடன் இருக்கும். மனதில் கள்ளம் கபடம் இல்லாமல் செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புதியவர்களின் அன்பு இருக்கும். அனைவருக்கும் வேண்டிய உதவிகளை உங்களால் செய்து கொடுக்க முடியும். சுயகௌரவம் பாதுகாக்கப்படும். உற்சாகமாக செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயத்தை பின்பற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை நல்லபடியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடிக்கக் கூடிய சூழல் இருக்கும். ஆர்வமுடன் செயல்படுவீர்கள்.

நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் சரியாகிவிடும். எதிரும் புதிருமாக இருந்தவர்கள் உங்கள் மீது அன்பு பாராட்டக் கூடும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். எதையும் யோசித்து செயல்பட வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை சின்ன சின்ன பிரச்சனைகள் எழும். அதனை நீங்களே சரி செய்து கொள்ள வேண்டும். கடன்கள் தீர்ந்து சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். காதல் பிரச்சனையை கொடுக்காது. கண்டிப்பாக காதல் கைகூடிவிடும். மாணவர்களுக்கு தொட்டது துலங்கும். விளையாட்டிலும் கல்வியிலும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் ஊதா

Categories

Tech |