Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! துணிச்சல் இருக்கும்….! எதிர்ப்புகள் விலகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! வெற்றி வாய்ப்புகள் கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும். 

இன்று செயல்களில் சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருக்கும். சில காரியங்களை ஆரம்பிக்கும் போது குழப்பங்கள் இருக்கும். சில பிரச்சினைகளை கையாள வேண்டும். சிக்கல்களை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். கால தாமதம் ஏற்படும். பணம் கடன் பெறுவதற்கான சூழல் இருக்கின்றது. மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்கள். எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து செய்ய வேண்டும். உழைப்பு அதிகமாக இருப்பதினால் தலைவலி போன்ற பிரச்சினையும் முதுகு தண்டுவடத்தில் உள்ள பிரச்சனையும் கொஞ்சம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பகையும் விலகிச்செல்லும். வெற்றி வாய்ப்புகள் கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும்.

நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். காதலில் குழப்பங்கள் இருக்கும். அதனை நீங்கள் சரிசெய்து கொள்ளவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது முடிவெடுப்பது நல்லது. அவசரப்பட்டு முன்கூட்டியே எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம். மாணவர்கள் தைரியமாக இருப்பீர்கள். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். உங்களால் சிறப்பாக படிக்க முடியும். ஆசிரியர்களின் உதவி பரிபூரணமாக இருக்கும். சக நண்பர்கள் கூட உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் பிங்க்

Categories

Tech |