மீனம் ராசி அன்பர்களே.! செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இன்று பிறருக்கு உதவி புரிவதில் பெரிய மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காரியத்தில் தடை தாமதம் ஏற்பட்டாலும் சீக்கிரம் சரியாகும். குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வீண் செலவுகளை செய்ய வேண்டாம். முன்னோர் சொத்துக்கள் கையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். ஒப்பந்தங்களை நல்ல முறையில் படித்து பார்த்துவிட்டு கையெழுத்து போட வேண்டும். அலட்சியமும் அவசரமும் காட்ட வேண்டாம். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப்பெறுவீர்கள்.
குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் இருக்காது. கண்டிப்பாக சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். காதலில் தெளிவு இருக்க வேண்டும். மனதில் ஆனந்தம் இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்க்கையை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மாணவர்களுக்கும் குழப்பங்கள் இருக்கும். பெற்றோர்களின் ஆலோசனைப்படி எந்த ஒரு வேலையிலும் ஈடுபட்டு வாருங்கள். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது மெரூன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மெரூன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: மெரூன் மற்றும் சிவப்பு