Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! துணிச்சல் இருக்கும்….! சந்தோஷம் பிறக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் முடிவுகள் எடுக்க வேண்டும்.

இந்த திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். சில காரியங்களில் கால தாமதமாக நடைபெறும். அதற்கு நீங்கள் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்துதான் ஆக வேண்டும். நண்பரிடம் ஆலோசனை கேட்பீர்கள். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பெரியோரின் ஆலோசனை நம்பிக்கை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. அரசாங்க ஊழியர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். அரசாங்கத்தின் மூலம் பணம் வரவு கூட கண்டிப்பாக வரக்கூடும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதமாக இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலைகள் இருக்கும். தொழிலை முன்னேற்றகரமான இடத்திற்கு மாற்றி விடவேண்டும். வீடு மாற்றம் இடமாற்றம் போன்றவை ஏற்படக் கூடிய அமைப்பு இருக்கின்றது. உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. மனதில் நிம்மதி குறைந்தாலும் மனதில் சந்தோஷம் இருக்கும்.

சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் முடிவுகள் எடுக்க வேண்டும். தாய் தந்தையாரின் உடல் நிலையில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காதலில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகி முன்னேற்றத்தைக் கொடுக்கும். காதலில் உள்ள சின்னச் சின்ன குறைகள் எல்லாம் தீர்ந்துவிடும். மனதிற்குள் சந்தோஷம் வந்துவிடும். குடும்பத்தில் காதலைப் பற்றி பேச வேண்டும். அவர்கள் உங்களுக்கு பச்சைக்கொடி காட்டுவதில் எந்த சிக்கலும் இருக்காது. மாணவர்களுக்கு தைரியமான நாள். துணிச்சலாக செயல்பட முடியும். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |