Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தாமதம் ஏற்படும்….! வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்….!!

மீனம் ராசி அன்பர்களே.! காரியத்தில் தாமதம் ஏற்படும்.

உறவினர் ஒருவர் எதிர்பார்ப்புடன் உங்களை உதவிகள் செய்வார்கள். சில நபர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். நீங்களும் மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர மாற்று உபாதை பயன்படுத்த வேண்டும். பணவரவில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எதையும் யோசித்து செயல்பட வேண்டும். வீண் செலவைத் தவிர்த்துவிட வேண்டும். காரியத்தில் சின்னதாக தாமதம் இருந்தாலும் வருத்தப்பட வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் முயற்சி செய்தால் முன்னேறி சென்று விட முடியும். சொந்த பந்தங்களுடன் அளவோடு பழக வேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். நிலுவைப் பணம் கண்டிப்பாக வந்து சேரும்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் உங்களுடைய முயற்சி அதிகமாக இருக்கும். உங்களுடைய எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். காதல் இனிமையைக் கொடுக்கும். பிரச்சனைகளைப் ஏற்படுத்தாது. மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்களுக்கு தைரியமும் கல்வி மீது அக்கறையும் கல்வியில் முன்னேற கூடிய அமைப்பும் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |