மீனம் ராசி அன்பர்களே.! இல்ல தேவைகள் பூர்த்தியாகும்.
இன்று உறவுகளின் தொல்லையால் வெறுப்பு ஏற்படும். சிலர் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். கோபத்தால் வம்பை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. அமைதியை வெளிப்படுத்த வேண்டும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பதில் குறையும். சரக்குகளை விற்பதில் கவனம் வேண்டும். வேகம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் செய்வதில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்து செய்வீர்கள். சமூக அக்கறை இருக்கும். சமூகப்பணியில் ஆர்வம் இருக்கும். இல்ல தேவைகள் பூர்த்தியாகும். கோபம் அதிகரிக்கும். அதனால் பார்த்து பக்குவமாக எதையும் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு சின்ன சின்ன விஷயத்திற்கு கோபங்கள் வரும். பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். மாணவர்கள் மேல் கல்விக்கான முயற்சியை அதிகப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற முடியும். காதல் கொஞ்சம் தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும். சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் போகும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரு நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்