மீனம் ராசி அன்பர்களே.! மன சங்கடம் தீரும்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக இருந்த அனைத்து விதமான மன சங்கடங்கள் தீர்ந்து விடும். இன்று முதல் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி விடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். பொறுமையின் குணத்தினால் எல்லாத்தையும் சாதிக்க முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்தக்கூடிய அம்சங்களும் இருக்கும். லாபம் கண்டிப்பாக இருக்கும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
எதையும் துணிச்சலுடன் செய்து வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்களுக்கு வெற்றி கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சு வெளிப்படும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்யக்கூடும். கல்வி பற்றி அக்கறை இருக்கும். காதலில் சில நேரங்களில் சில சிக்கலான சூழலை சந்திக்க வேண்டியிருக்கும். அதை கடந்து தான் காதலில் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் கருநீலம்