Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! செல்வம் கூடும்….! செல்வாக்கு பெருகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எதிரிகள் தொல்லை இல்லை.

இன்று உங்கள் மனதில் ஒருவித மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். எதிர்மறையாக பேசுபவரிடம் அன்பு பாராட்டுவீர்கள். கோபங்கள் இல்லாமல் அனைவரிடமும் தன்மையாக பழகுவீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நடக்கும். பண வரவு கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். எல்லாக் காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியும். குழப்பங்கள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடிவிடும். செல்வமும் செல்வாக்கும் கூடிவிடும். எதிர்ப்புகளை எப்படியும் சமாளித்து விடுவீர்கள். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். முயற்சிகள் கூட சாதகமான பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்களைக் கேட்க முடியும்.

புத்தி சாதுரியம் வெளிப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு வெளிப்படும். நியாயமாக நடந்து கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தை பிரதிபலிப்புகள். காதல் பிரச்சனையை ஏற்படுத்தாது. காதல் சுமுகமாக செல்லும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு எல்லாவிதத்திலும் ஆர்வம் இருக்கும். பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் வாழ்க்கையில் சிறப்பாக எல்லாம் நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை

Categories

Tech |