மீனம் ராசி அன்பர்களே.! சில காரியங்களை கவனமுடன் செய்ய வேண்டும்.
இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மற்றவரிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். உங்களுடைய துன்பம் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எதையும் செய்ய வேண்டும். பெரிய முதலீடுகளை கவனமாக கையாள வேண்டும். புதிய திட்டங்கள் ஓரளவுக்கு நிறைவேறும். எல்லாவற்றையும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரபடாமல் ஈடுபடவேண்டும். யாரை பற்றியும் கவலைபடாமல் காரியங்களை செய்ய வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் காத்திருக்கின்றது. அதனை நீங்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முயற்சிகள் உங்களுக்கும் முன்னேற்றமான பலனைக் கொடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் இருக்கும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்தி உங்கள் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தியாக்கி விடுவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
வீண் பிரச்சினைகள் வந்து செல்லும். சில காரியங்களை கவனமுடன் செய்ய வேண்டும். ரகசியங்களை பாதுகாத்தால் மட்டுமே நன்மையில் போய் முடியும். மதிநுட்பத்துடன் செயல்பட்டு எதையும் வெற்றிகரமாக உங்களால் செய்ய முடியும். காதல் கைகூடும். காதல் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லும். மாணவர்கள் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். தைரியம் கூடும். மாணவர்கள் சில முக்கிய முடிவுகளை தானாகவே எடுத்துக் கொள்வீர்கள். கண்டிப்பாக நன்மை ஏற்படும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு