மீனம் ராசி அன்பர்களே.! அவசரம் வேண்டாம்.
இன்று தயவு செய்து எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் பரபரப்பு வேண்டாம். கொஞ்சம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல்கள் கண்டிப்பாக குறையும். எதிரிகள் தொல்லை எதுவுமில்லை. ஊதிய உயர்விற்கான அறிகுறிகள் இருக்கும். திருமணயோகம் கைகூடும். சகோதர ஒற்றுமை பலப்படும். குடும்பத்தாருக்கு என்னவேண்டுமோ உங்களால் செய்து கொடுக்க முடியும். அனைவரையும் அனுசரித்துச் சென்று காரியங்களை சிறப்பாக செய்து கொடுக்க முடியும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் சுமுகமாக முடியும்.
எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. மனைவி மூலம் பணவரவு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். எதையும் தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். காதலில் பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. நடைமுறை சிக்கல்கள் தான் இருக்கும். அதனை விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 4 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் கருநீலம்