Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தேவைகள் பூர்த்தியாகும் நாள்….! பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! பிரச்சனைகள் இல்லாத நாள்.

இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீரென்று வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும். உங்களுடைய தொழில் சிறப்பாக நடக்கும். பணப்புழக்கம் இருக்கும். இதனால் சந்தோஷம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது. சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழலும் இருக்கின்றது. மனதிற்கு பிடித்தமான நபர்களை சந்திக்க கூடும். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நீங்கள் செயல்படுவது நன்மையை கொடுக்கும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான திட்டங்களும் உங்களிடம் இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் மட்டும் கொஞ்சம் இழுபறியாக இருக்கும். திருமணத்திற்காக நீங்கள் வரன் தேடிக் கொண்டே இருங்கள்.

நல்ல வரன் கிடைத்து விட்டால் திருமணத்தை உடனே முடித்து விடுவது நல்லது. சிலருக்கு காலையிலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனைகள் பெரிதாக இல்லாததினால் மனதில் சந்தோசம் நிறைந்து காணப்படும். காதல் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். சில நேரங்களில் கஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த கஷ்டங்களை சீக்கிரம் சரியாகிவிடும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களும் கல்வி பற்றிய அக்கறைகளும் மேற்கல்விக்கான முயற்சியிலும் முன்னேற்றம் இருக்கின்றது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கரும் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரும் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: கரும் பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |