Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! எதிரிகளின் தொல்லை இருக்காது….! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! 

இன்று தொலைதூர நல்ல தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோஷமும் வெளிநாட்டு தொடர்புடைய தகவல்கள் சில முன்னேற்றமான சூழலையும் தரும். மனைவியின் ஒத்துழைப்பு மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். சிலருக்கு நிலம், வீடு விற்பனையால் லாபம்  கிடைக்கும். முன்னோர்கள் சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் கண்டிப்பாக சரியாகும். நண்பர்கள் உதவிகளை செய்வார்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிடும். உத்தியோகத்தில் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். உத்யோகத்தில் உங்களுடைய சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

எதிரிகளின் தொல்லை இருக்காது. நிதானமான போக்கு இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியாகும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். வரன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காதல் கண்டிப்பாக கைகூடிவிடும். மனதிற்குள் சந்தோஷத்தை ஏற்படுத்திவிடும். மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்கக் கூடிய சூழலை உருவாக்கி விடும். மாணவர்களின் தெளிவான சிந்தனை என்று பாராட்டும் வகையில் இருக்கும். மாணவர்கள் குழப்பம் இல்லாமல் எதையும் செய்து முடிக்க முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |