Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! நினைத்தது நிறைவேறும்….! கவனம் வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! மனதிற்கு திருப்தியான சூழல் இருக்கும். 

இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். முகஸ்துதிக்கு மாயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள் என்பது சந்தேகம் தான். கொஞ்சம் அவர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். தேவையான அளவில் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக உங்களால் செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் கிடைக்கும். சுறுசுறுப்பாக உங்களால் இயங்க முடியும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகள் கூட உங்களுடைய சொல்லைக் கேட்டு நடப்பது மகிழ்ச்சியாக இருக்கும். மனதிற்கு திருப்தியான சூழல் இருக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

சில இடங்களில் மட்டும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். நினைத்தது நிறைவேறும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வாக்குகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். காதல் கைகூடும். காதலில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். கல்விக்காக சில முயற்சிகளை எடுப்பீர்கள். அது வெற்றியை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |