மீனம் ராசி அன்பர்களே.! மனதை குழப்பம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று அவசரப்பட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். மனதிற்குள் இனம் புரியாத வருத்தங்கள் ஏற்படும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பேசும்போது கவனமாக பேச வேண்டும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் முடியாமல் இருப்பதினால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். இருப்பதை வைத்துக்கொண்டு ஓட்டிச் செல்வது நல்லது. எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். பயன்தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். சின்ன சின்ன விஷயத்தில் காரியத்தடை தாமதம் இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். மனதை குழப்பம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பயப்படாமல் பணியை செய்ய வேண்டும். காரியத்தடை தாமதம் இருக்கும். சந்திராஷ்டமம் தினம் முடியும்வரை கவனத்துடன் செயல்பட வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பல பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். காதலில் கண்டிப்பாக கசப்பு இருக்கும். காதலை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாத சூழல் இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அப்பொழுது தான் காதல் கை கூடும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்