மீனம் ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்தவித பழக்கவழக்கங்களும் வேண்டாம். அவர்களிடம் உங்களை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் பேச வேண்டாம். இன்று ரகசியங்களை கூடுமானவரை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உள்ள சிரமங்களை தாமதமில்லாமல் சரி செய்வது ரொம்ப நல்லது. பணவரவை விட நிர்வாக செலவு கொஞ்சம் கூடும்.
பணி விஷயமாக வெளியில் செல்லவேண்டி இருக்கும். தயவுசெய்து இன்று உணவுப்பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். பெற்றோர்கள், உறவினர்களிடம் அரவணைப்பு இன்று அதிகமாக இருக்கும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல்கள் கொஞ்சம் இருக்கும். யோசித்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.
புதிய ஆர்டர்கள் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைப்பினை இன்று கொடுக்க வேண்டி இருக்கும். வேலையில் கொஞ்சம் கவனமுடன் நடந்து கொள்வது ரொம்ப நல்லது. இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
மனம் ஓரளவு மகிழ்ச்சியாகவே இன்று காணப்படும். இன்று தெய்வீக சிந்தனை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகை செலவு ஏற்படும்.இன்று வெளியூர் பயணம் மேற்கொள்வதால் செலவு கொஞ்சம் ஏற்படும். இன்று சரியான நேரம் உணவு எடுத்துக் கொள்வது மட்டும் நல்லது, எப்பொழுதுமே கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்