மீனம் ராசி அன்பர்களே….
இன்று குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.
ஏப்பொழுதும் கவனத்துடன் பாடங்களை படிப்பது மிகவும் அவசியம். எதிரில் இருப்பவர்களை எடை போடும் சாமர்த்தியம் உண்டாகும். இன்று நாள் ஒரு பொன்னான நாளாகத்தான் அமையும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். காதல் கைகூடும் மற்றும் திருமண முயற்சி வெற்றியில் முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு.
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை மற்றும் வெள்ளை