Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… சவால்களை சமாளிப்பீர்கள்… பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று சவால்களை ஏற்று செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் சார்ந்த இடையூறுகளை சரிசெய்வீர்கள். கூடுதல் பணவரவு கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் நல்ல செயல் பெருமையைத் தேடிக் கொடுக்கும். இன்று பெண்களால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் இருக்கும். இன்று அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை  மட்டும் தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் சொல்ல வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் உணவுகளை மட்டும் சரியாக தேர்ந்தெடுத்து உண்ணுங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து ரொம்ப நல்லது.

நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் முழுவதும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |