Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில்… கொலை செய்யப்பட்ட மீனவர்… ” போலீஸ்க்கு தகவலளித்த கொலையாளிகள்”….!!

மதுபோதையில் மீனவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தை  சேர்ந்தவர் கிங்சன். இவர்  மீன்பிடிக்கும்  தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் டேனியல்ராஜ் ஆகிய இருவரும் கிங்சனுடன் சேர்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மூவரும் புத்தாண்டு தினத்தை கொண்டாட திட்டமிட்டு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சிலுவைபட்டியில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் மூவருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அந்தோணி ராஜும் டேனியல் ராஜும்  சேர்ந்து கிங்சசனை பீர் பாட்டிலால் குத்தி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கிங்சன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் தாங்கள் கொலை செய்தது குறித்து காவல்துறையினருக்கு  தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிங்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜ் மற்றும் டேனியல் ராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |