Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் மீது தாக்குதல் – துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம்…!!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கற்களையும், பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இலங்கை கடற்படையினர் கடுமையாக  தாக்கியிருக்கும் செயலினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் அதிமுக அரசு வலியுறுத்தும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |