மீன் பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்கு சொந்தமானது ஜெர்ஸி தீவாகும். இத்தீவில் மீன் பிடிப்பதற்காக அனுமதி கோரி பிரான்ஸ் மீனவர்கள் விண்ணப்பம் ஒன்றை பிரித்தானியாவிடம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் மிகவும் கோபம் அடைந்துள்ளது. மேலும் பிரான்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune பிரித்தானியாவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரமானது துண்டித்துவிடப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ளார். மேலும் ஐரோப்பியா உயர் அடுக்கில் அல்லது தேசியளவில் இருந்து பிரித்தானியாவிற்கு நெருக்கடி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக எங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் தூதரக அளவில் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்துவோம்.
ஒருவேளை பேச்சுவார்த்தை சாதகமாக இல்லையென்றால் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று Clement Beaune கூறியுள்ளார். சான்றாக பிரித்தானியா மின்சாரத்துக்கு பிரான்ஸை நம்பியுள்ளது. மேலும் அவர்கள் ஐரோப்பாவுடன் தனியாக மோதுதல் என்பது சாத்தியமாகாத காரியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரெக்சிட் நிறைவடைந்த பின்னரும் அதன் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.