பிக்பாஸ் சுரேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது இறுதி வாரம் என்பதால் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது கிட்டத்தட்ட 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இன்னும் சிவானி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை . இது குறித்து சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என கூறியதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தனர் .
Insulted again
— Suresh Chakravarthy (@bbsureshthatha) January 13, 2021
இதையடுத்து நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து தனக்கு அழைப்பு வந்தது போல் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் . இந்நிலையில் ‘மீண்டும் அவமதிக்கப்பட்டேன்’ என சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் . இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சுரேஷ் வர வாய்ப்பு இல்லை என தெரிகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒதுக்கி வைக்கும் அளவிற்கு சுரேஷ் எந்த தவறையும் செய்யவில்லை என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.