கார்த்திக் நரேன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . நேற்று இந்த படத்தில் இடம்பெறவுள்ள ஒரு பாடலுக்காக நடிகர் தனுஷ் நடன ஒத்திகை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது .
Very happy to welcome the Versatile actor @thondankani to our team #D43 @dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @smruthi_venkat @Lyricist_Vivek pic.twitter.com/fJoOV2ar6n
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 7, 2021
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் தனுஷ் – சமுத்ரகனியின் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ள இந்த படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.