‘பேட்ட’ பட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளம் . இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வந்தார். இவருடன் இணைந்து இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தது . சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் பணிபுரிந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் இந்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது .
இந்நிலையில் நடிகர் ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ‘பேட்ட’ படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது . தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதாக கூறப்படுகிறது . விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.