பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் . நேற்று அர்ச்சனா, நிஷா ,ரமேஷ் ,ரேகா ஆகியோர் ரகசிய அறை வழியே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக பிக்பாஸ் வீடு களைகட்டியது . இதையடுத்து இன்று வெளியான முதல் புரோமோ வில் சுசித்ரா , சம்யுக்தா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர் .
#Day100 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/HX1UdPZFOg
— Vijay Television (@vijaytelevision) January 12, 2021
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ வில் சனம்,ஆஜித், வேல்முருகன் உட்பட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இன்றைய டாஸ்க் ஒன்றில் பேச்சுவார்த்தையின் போது ஆரி , ரியோ இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் மாறி மாறி ‘சாரி’ கேட்பது போல் புரோமோ நிறைவடைகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு நிறைந்துள்ளதால் கலகலப்பாக இருக்கும் என்பது தெரிகிறது . அதேசமயம் பிரச்சனைகள் எழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.