நடிகர் நகுல் அவர் நடித்து வரும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகர் நகுல் பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகரும் ஆவார். அந்நியன், கஜினி, வல்லவன், கந்தகோட்டை ,வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திலும் இவர் ஒரு பாடலை பாடியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் நகுல் மீண்டும் அவர் நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். சதுசன் என்பவர் இயக்கி வரும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நகுல் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் . இந்த பாடலை இசையமைப்பாளர் அஸ்வந்த் கம்போஸ் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் நகுல் இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.