Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கிய டெல்டா கொரோனா…. திணறி தவிக்கும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பரவுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது முதன்முதலாக 2019 ஆம் ஆண்டில் சீன நாட்டில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3.50 கோடி மக்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக  மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 60,986 ஆகும். இதில் 390 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து புதிதாக 80% பேர் டெல்டா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. மேலும் தொற்று பரவல் அதிகமாக உள்ள இடங்களில் குறைவாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |