இதுவரை வெளியேற்றப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எகிறியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் இந்த வாரம் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது .
இதையடுத்து அந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது . இவர்களில் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல மாட்டார் என தெரிகிறது. இதன் பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்னென்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம் .