மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘நான் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த முதல் படம் மாஸ்டர் . விஜய் போன்ற புகழ் பெற்ற நடிகருடன் இணைந்து நடிக்கும் ஆர்வம் பெரிய அளவில் இருந்தது. லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி போன்ற திறமைசாலிகளுடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது . மாஸ்டர் படம் என் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல். இந்த படக்குழுவினரோடு மீண்டும் இணைய வேண்டும்’ என கூறியுள்ளார்.