கொரோனா வைரஸை விட 75 மடங்கு அதிக அளவு மூளையை பாதிக்கக்கூடிய பெரும் தொற்று ஒன்று வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை வந்த தொற்றுநோய்களிலேயே இப்போது வரப்போகும் இந்த தொற்றுநோய் தான் மிகவும் கொடியது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த தொற்று நோய் என்னவென்றால் ,பழங்களை உண்ணும் வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் தற்போது மீண்டும் உருமாற்றம் அடைந்து மனிதகுலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடுமையான மூளை வீக்கம்,வாந்தி, வலிப்பு போன்றவை நிபா வைரஸின் அறிகுறிகள். 1999ஆம் ஆண்டு முதன் முதலில் மலேசியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் 40சதவீதத்திலிருந்து 75 சதவீதம் வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இம்பீரியல் கல்லூரி இது குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், கொரோனாவின் இறப்பு விகிதம் 1 சதவீதம் என்றால் நிபாவால் பல ஆயிரம் மக்கள் உயிரிழக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 45 நாட்கள் வரை அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. எனவே அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த நோயால் அவதிப்பட வேண்டிய நிலை உருவாகும். இதுவரை உலக அளவில்2.5 மில்லியன் மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆனால் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது கொரோனா போல் இல்லை. உணவு அல்லது விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் பரவும், மற்றும் வைரஸ் பாதிப்பு உள்ளவர்களிடம் பழகுவதன் மூலமும் இந்த தொற்று ஏற்படும். தென் கிழக்கு ஆசியா, தென் மேற்கு மத்திய ஆப்பிரிக்கா, அமேசான் சுற்றியுள்ள பகுதிகள்,கிழக்கு ஆஸ்திரேலியா போன்ற பகுதிகள் உருமாற்றம் அடைந்த நிபா வைரஸால் பாதிக்கப்படும் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.