Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வருத்தத்தில் குக் வித் கோமாளி பவித்ரா… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா மீண்டும் வருத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் .

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிகவும் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கங்கள் குறித்து வருத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் . இந்நிலையில் மீண்டும் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் ‘கடந்த முறை நான் வெளியிட்ட வீடியோ தற்போது பல பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது . என் வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பல பக்கங்களில் பகிரப்பட்டது . அதுவும் நானே பதிவு செய்வது போல் அமைக்கப்பட்டிருந்தது .

https://twitter.com/itspavitralaksh/status/1357685119687958528

ஆனால் இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வமான பக்கம் . மற்ற பக்கங்கள் என் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக ஒரு சிலர் ஆரம்பித்த பக்கங்கள் . என்னுடைய அதிகாரப்பூர்வ பக்கங்கள் தவிர மற்ற பக்கங்களை நடத்துபவர்கள் என்னைவிட அதிக பாலோயர்களை வைத்துள்ளார்கள் . அதற்காக நான் பெருமைப்படுகிறேன் . ஆனால் என்னுடைய பக்கங்களில் இருக்கும் பதிவுகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு. மற்ற பக்கங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல . என்னைவிட அதிக ஆக்டிவாக இருந்து எனக்கு பாப்புலாரிட்டி பெற்றுக் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார். தற்போது பவித்ர லட்சுமியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |