Categories
சினிமா தேசிய செய்திகள்

மீண்டும் வெளியாகிறது” பிஎம் நரேந்திர மோடி” திரைப்படம்…!!

நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான  பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப் படம் வரும் 15ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது.

கடந்த வருடம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் 24ம் தேதி வெளியான இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்க ஓமன் குமார் இயக்கியிருந்தார். அதில் திரு நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் 23 மொழிகளில் உருவாகி இருந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு வரும் 15 முதல் இப்படம் மீண்டும் திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் தரப்பில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் திரு மோடிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தான் விவேக் ஓபராய் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் கொரோனா பொது முடக்க தளர்வுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை பிஎம் நரேந்திர மோடி படம் தருகிறது.

Categories

Tech |