Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அங்க போறேன்னு சொன்னாரு… காணாமல் தவிக்கும் மனைவி… காவல்துறையினரின் தேடுதல் வேட்டை…!!

மீன்பிடித்து வருவதாக கூறி சென்ற மீனவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாளாப்பள்ளி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் முனியப்பன் மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அணையில்  மீன்பிடிக்கச் செல்வதாக கூறி சென்ற முனியப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி பதற்றம் அடைந்துள்ளார்.

இதனால் அவரது மனைவி கிருஷ்ணகிரி காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியோடு அந்த அணைக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மோட்டார் பரிசலில் சென்று முனியப்பனை தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் காவல்துறையினர் காணாமல் போன முனியப்பனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |