Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்ற வலியுறுத்தல்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சின்னதுரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு தரப்பில் மீன் பிடித்து கரை வந்து சேரும் போது கடல் சீற்றத்தால் மணல் திட்டில் படகு மோதி, கடந்த நான்கு தினங்களில் இரு  மீனவர்கள் பலியானார்கள். தொடர்ந்து அதே போன்று மேலும் ஒரு மீனவர் பலியானார். நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்து கரை திரும்பிய போது, முகதுவாரத்தின் மண் திட்டினால் ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி 2 படகுகள் கவிழ்ந்தது. இதில் கடலில் தத்தளித்த 10 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். சிறு காயங்களோடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே வாரத்தில்  மூன்று மீனவர்களை தொடர்ந்து பலியாகக் காரணமான அடக்குமுறையை கண்டித்து, சின்னதுரை மீனவ கிராமத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |