கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் ஆற்றில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்களின் உதவியுடன் உயிருடன் வனத்துறையினர் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு சப்பாத்து பகுதியிலுள்ள பரளி ஆற்றில் அப்பகுதி இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக வலை விதித்துள்ளனர். அப்போது வலையில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதை கண்டு இளைஞர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து வலையில் இருந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு உயிருடன் மீட்ட வனத்துறையினர் அதனை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.