நடிகர் விஜயை மீண்டும் சீண்டும் விதமாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான மீராமிதுன் சமீப நாட்களாக நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை தாக்கிப் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது குறித்த பல கேள்விகளை பல பிரபலங்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல் நடிகர் சூர்யாவும் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என பண்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார். நடிகர் விஜய்யும் ஏற்கனவே பல மேடைகளில் கூறியதைப்போல், நம்மைப் பிடிக்காமல் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். IGNORE NEGATIVITY என்பதற்கு இணங்க அமைதி காத்து வருகிறார்.
என்னதான் அமைதியாக சென்றாலும், மீண்டும் மீண்டும் நடிகர் விஜய்யை சீண்டும் விதமாக மற்றொரு பதிவை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பகிர்ந்துள்ளார். அதன்படி, நடிகர் மகேஷ்பாபு விடுத்த மரம் நடும் சவாலை ஏற்றுக்கொண்டு நடிகர் விஜய் தன் வீட்டில் மரம் நட்டு அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்து கருத்து தெரிவித்த மீரா மிதுன், வீட்டிற்குள் மரம் நட்டால் பற்றாது, நடிகர் விவேக் அவர்களை பார்த்து எங்கு மரம் நட வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள் என விமர்சித்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.