மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் தன் திறமையாலும் அழகாலும் பிரபல நடிகைகளின் வரிசையில் வெகுவிரைவில் இடம் பிடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை தன்னுடைய அழகால் கட்டிப்போட்டார் மீரா ஜாஸ்மின். நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு மீரா ஜாஸ்மின் மாதிரி மூக்கும் முழியுமா இருக்கணும் என இளைஞர்கள் சொல்லும் அளவிற்கு அவர் தன் திறமையை திரையுலகில் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு, ‘ரன்’ படத்தில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த படத்தை தொடந்து, பாலா, புதியகீதை, ஆஞ்சநேயா,கஸ்தூரி மான், நேப்பாளி, மெர்க்குரி பூக்கள் என பல தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த “பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றார். மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தன் வாழ்வின் அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளார்.