தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் கடந்த 2001-ம் ஆண்டு மலையாள சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் மீரா ஜாஸ்மின் ரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு புதிய கீதை, ஆஞ்சநேயா மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்தார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்து வந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மீண்டும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வலைதளத்தில் மீரா ஜாஸ்மின் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிகனசன்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லை மீறி புகைப்படத்தை வெளியிடுவதா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.