ஜாதியை மட்டமாக பேசிய மீராமிதுன் மீது புதிதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மிஸ் இந்தியா உட்பட சில அழகிப் போட்டிகளில் வென்றுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரியவராக வலம் வரும் இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதன்படி சில இயக்குனர்களை கைகாட்டி இவர்களின் படங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் சினி துறையிலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் சாதியை குறிப்பிட்டு கூறியுள்ளார். மேலும் இந்த சமுதாயத்தை சேர்ந்த அனைத்து இயக்குனர்களும் வெளியேற்றப்பட்டால் சினிமாத்துறை பெரிதளவு மதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மீரா மிதுனின் இச்செயலுக்கு பலரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். மேலும் இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது சாதிப்பிரிவினை தூண்டல், சாதிய உணர்வுகளை கெடுத்தல் உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.