மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்தித்தார் இபிஎஸ். உள்துறை அமைச்சருடனான இந்த சந்திப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இருக்கிறது. இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல், உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது.
டெல்லியில் இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இந்த சத்திய்ப்பு நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமாக, அரசு சார்ந்த சந்திப்பாக நாம் கருத வேண்டி இருக்கிறது. முக்கியமாக 11 மணிக்கு தொடங்கி இருந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்திருக்கிறது. இந்த சந்திப்பின்போது பல்வேறு கோப்புகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கையில் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது.
அந்த கோப்புகளில் இருக்கக்கூடிய முக்கியமான ஆவணங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நிலவக் கூடிய முக்கியமான சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் புகார்கள் எழுந்து இருக்கக்கூடிய சூழலில் அவையெல்லாம் குறித்து முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.