அதிமுக கட்சியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்ததிலிருந்து உட்கட்சி பூசலானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தற்போது ஓபிஎஸ் தயாராகியுள்ளார். முதலில் இபிஎஸ்-க்கு சாதகமாகவே அனைத்து விஷயங்களும் நடந்தாலும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கையில் தான் அதிமுக கட்சியின் கடைசி தீர்ப்பு இருக்கிறது.
அதாவது யாருக்கு தலைமை பொறுப்பு கிடைக்கும் என்ற என்ற தகவல் தெரிந்துவிடும். ஆனால் கட்சியின் 90% நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் தான் இருப்பதாக அவர் கூறிவரும் நிலையில், பெரும்பாலான தொண்டர்கள் தங்களுடைய பக்கமே இருப்பதாக ஓபிஎஸ் கூறி வருகிறார். எது எப்படி இருந்தாலும் சரி பாஜக மேலிடம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தான் விரும்புகிறது.
இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒற்றுமை குறித்து கூடிய விரைவில் ஓபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங் மூலம் ஓபிஎஸ்க்கு சாதகமான பல விஷயங்கள் அதிமுகவில் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ், பிரதமர் சந்திப்பு வதந்தி என்று சிலர் கூறினாலும், இன்னும் கொஞ்ச நாளில் அதிமுகவின் தலைமை பொறுப்பு யாருக்கு என்ற அதிகாரப்பூர்வ தகவல் தெரிந்துவிடும் என அதிமுகவின் தொண்டர்கள் கூறுகிறார்கள்.