முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி-19 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடிநேரில் சந்திக்க உள்ளார்.
ஜனவரி 19ஆம் தேதி நிகழவுள்ள இந்த சந்திப்பு அன்று தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க மோடியை அழைப்பு விடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.