Categories
அரசியல் மாநில செய்திகள்

கொங்கு மண்டலத்தில் மெகா டார்கெட்…. அடுத்தடுத்து சேலம், திருச்சியில்….. இபிஎஸ்-க்கு எதிராக களத்தில் வெடிக்க தயாரான ஓபிஎஸ் டீம்….!!!!!

அதிமுக கட்சியின் கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொறுத்து தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தற்போது ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாறி மாறி தொண்டர்களை தங்கள் வசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் ஓபிஎஸ் நிர்வாகிகளை சந்தித்து இபிஎஸ்-க்கு எதிராக அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கான முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக எடப்பாடி கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை தன் வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நிர்வாகிகளுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதாவது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது 11 மருத்துவக் கல்லூரிகளில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக திமுக அரசு கூறியுள்ளது. அதோடு கொடநாடு வழக்கு விசாரணையும் சூடு பிடித்து வரும் நிலையில், 2 வழக்கிலும் இபிஸ்-க்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது திமுக அரசுடன் மறைமுக கூட்டணியை இபிஎஸ் வைத்திருக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதால் இந்த விஷயத்தை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்.

அதன் பிறகு கோவை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மாநாடுகளை நடத்தி பொதுமக்களிடம் நம்முடைய செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதனையடுத்து எதிர் தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகளை நம் வசம் கொண்டுவர வேண்டும் போன்ற ஆலோசனைகளை ஓபிஎஸ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் நாளுக்கு நாள்  உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வருவதால் தொண்டர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

Categories

Tech |